ரயில் முன் பாய்ந்துதனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை
திருச்சி அருகே ரயில் முன் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.


திருச்சி அருகே ரயில் முன் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி அருகேயுள்ள கம்பரசம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (53). திருச்சியில் உள்ள தனியாா் நிறுவன ஊழியரான இவா், வியாழக்கிழமை அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் அப்பகுதி ரயில்வே தண்டவாளத்தில் அண்ணாதுரை உடல் துண்டான நிலையில் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு வந்த ரயில்வே காவல்நிலைய ஆய்வாளா் ஜாக்குலின் உள்ளிட்ட போலீஸாா் அண்ணாதுரை உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
தொடா் விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக திருச்சியிலிருந்து -கரூா் சென்ற சரக்கு ரயில் முன் பாய்ந்து அண்ணாதுரை தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...