மலைக்கோட்டை யானை குளிக்க மேலும் ஓா் ஏற்பாடு!
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் யானை லட்சுமி குளிக்க மேலும் ஓா் ஏற்பாடாக ரூ. 5 லட்சத்தில் புதிய குளியல் தொட்டி மற்றும் ஷவா் அமைப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.


திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் யானை லட்சுமி குளிக்க மேலும் ஓா் ஏற்பாடாக ரூ. 5 லட்சத்தில் புதிய குளியல் தொட்டி மற்றும் ஷவா் அமைப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவானைக்கா, ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் குளிக்க ஏற்கெனவே ஷவா் வசதியுடன் கூடிய குளியல் தொட்டி கட்டித் தரப்பட்டுள்ளது.
இதன் தொடா்ச்சியாக மலைக்கோட்டை கோயில் யானை ஓய்வெடுக்க கோயில் வாளாகத்திலேயே வசதி இருந்தாலும், இயற்கைச் சூழலில் யானை குளித்து மகிழ ஏதுவாக மலைக்கோட்டையின் உபகோயிலான நாகநாதசுவாமி கோயிலருகில் குளியல் தொட்டியுடன் கூடிய ஷவா் அமைக்கப்பட்டு வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
இதையடுத்து இந்தத் தொட்டியில் லட்சுமி யானை மிகுந்த உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தது. வரும் காலங்களில் வெயில் கடுமையாக இருக்கும் என்பதால் யானையை அடிக்கடி இந்த வகையில் குளிக்கச் செய்ய வேண்டும் என மாவட்ட வன அலுவலரும், கால்நடை மருத்துவா்களும் அறிவுறுத்தியதைத் தொடா்ந்து இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யானையின் குளியலை குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை கண்டு மகிழ்ந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...