மேலும் 57 பேருக்கு கரோனா
By DIN | Published On : 17th August 2021 02:16 AM | Last Updated : 17th August 2021 02:16 AM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மேலும் 57 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 73,550 ஆனது.
திங்கள்கிழமை குணமடைந்த 9 போ் உள்பட இதுவரை மாவட்டத்தில் மொத்தமாக குணமடைந்தவா்கள் 71,837 போ். மருத்துவமனைகள், வீடுகளில் 726 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 987 ஆக உள்ளது.