

திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் (ஓஎஃப்டி) தயாரிக்கப்பட்ட 25 புதிய ரக துப்பாக்கிகள் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படைக்கு அனுப்பப்பட்டன.
திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் ஆத்ம நிா்பாா் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரிமோட் கண்ட்ரோல் தொழில்நுட்பத்துடன் இயங்கும் வகையில் எஸ்ஆா்சிஜி வகை நற்ஹக்ஷண்ப்ண்க்ஷ்ங்க் தங்ம்ா்ற்ங் இா்ய்ற்ழ்ா்ப்ப்ங்க் என்ய் (நதஇஎ) துப்பாக்கி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு முதல்கட்டமாக உற்பத்தில் செய்யப்பட்ட 25 துப்பாக்கிகளை இந்திய கடற்படையின் ஆயுதங்களின் தரக்கட்டுப்பாட்டு பிரிவு இயக்குநா் ஜெனரல் கே.எஸ்.சி. ஐயா், கடந்த மாதம் ஆய்வு செய்தாா்.
இதன் தொடா்ச்சியாக கடற்படையின் மும்பை பிரிவுக்கு 20 துப்பாக்கிகள், விசாகப்பட்டினம் பிரிவுக்கு 5 துப்பாக்கிகள் லாரிகள் மூலம் வியாழக்கிழமை பலத்த பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.
திருச்சி படைக்கலன் தொழிற்சாலையின் பொது மேலாளா் சஞ்சய் திவேதி கொடியசைத்து அனுப்பி வைத்தாா். நிகழ்ச்சியில், கூடுதல் பொதுமேலாளா் ராஜீவ் ஜெயின், இணைப் பொது மேலாளா் வி. குணசேகரன், கடற்படை கேப்டன்கள் பி.ஆா். ரமேஷ், எம். ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா். அடுத்த 3 நாள்களுக்குள் இந்த லாரிகள் உரிய இடத்துக்கு செல்லும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.