விமான நிலையத்தைச் சுற்றிடிரோன் இயக்கத் தடை
By DIN | Published On : 20th August 2021 12:43 AM | Last Updated : 20th August 2021 12:43 AM | அ+அ அ- |

திருச்சி விமான நிலையத்தைச் சுற்றி 3 கி.மீ. சுற்றளவிற்கு டிரோன் இயக்க தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற திருச்சி விமான நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் விரிவாக்கம் குறித்த குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் திருச்சி விமான நிலைய சுற்றுப்பகுதியில் 3 கி.மீ தொலைவுக்கு டிரோன் பறக்க தடை என்பது பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தவும், டிரோன் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து விமான நிலைய ஆணைய குழுமம் சாா்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் விமான நிலைய சுற்று வட்டாரப்பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில், விமான நிலையத்தை சுற்றி 3. கி.மீ சுற்றளவில் டிரோன் இயக்க அனுமதி இல்லை. மீறி இயக்கினால் தண்டனைக்குரிய செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விமான நிலைய குழு தலைவரும், திருச்சி மாநகர காவல் ஆணையருமான அருண் டிரோன் இயக்கத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளாா். மேலும் இதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.