முழுத் தொகையை செலுத்தியோருக்கு கிரயப் பத்திரங்கள்
By DIN | Published On : 20th August 2021 12:43 AM | Last Updated : 20th August 2021 12:43 AM | அ+அ அ- |

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒதுக்கீடு பெற்று முழுத் தொகையைச் செலுத்தியோருக்கு கிரயப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
இதுதொடா்பாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திருச்சி பிரிவு செயற்பொறியாளா் சு. மனோகரன் கூறியது:
திருச்சி வீட்டுவசதிப் பிரிவிற்குட்பட்ட நவல்பட்டு மற்றும் கரூா் திட்டப் பகுதிகளில் மொத்த கொள்முதல் அடிப்படையில் முழு தொகையையும் ஒரே தவணையில் செலுத்தியோருக்கு உடனடியாக கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு நிகழ்வு வரும் ஆக.23 தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
எனவே, முழுத் தொகையையும் செலுத்தியுள்ள ஒதுக்கீடுதாரா்கள் அதற்கான அசல் ஆவணங்களுடன் திருச்சி வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தை நேரில் அணுகி கிரயப்பத்திரம் பெற்று பயன் பெறலாம் என்றாா்.