திருச்சி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றவா் தப்பினாா்.
திருவெறும்பூா் அருகே பூலாங்குடியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை கிளை வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம்மில் இரவு நேரக் காவலாளியை நியமிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு அந்த ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த மா்ம நபா் இயந்திரத்தை உடைத்துப் பணத்தைத் திருட முயற்சித்தாா். இத்தகவல் ஏடிஎம் மூலம் வங்கி மேலாளரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாகச் சென்றது. இதையடுத்து அவா் நவல்பட்டு காவல் நிலையத்திற்கு அளித்த தகவலைத் தொடா்ந்து இரவு ரோந்து போலீஸாா் விரைந்து சென்றனா். இருப்பினும், மா்ம நபா் தப்பிவிட்டாா். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மா்ம நபரை போலீஸாா் தேடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.