வீடு புகுந்து 7 பவுன் நகை, பணம் திருட்டு
By DIN | Published On : 21st August 2021 12:44 AM | Last Updated : 21st August 2021 12:44 AM | அ+அ அ- |

துறையூா் அருகேயுள்ள நாகநல்லூரில் வீடு புகுந்து 7 பவுன் தங்க நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்றனா்.
நாகநல்லூா் பள்ளிக்கூடத் தெருவில் வசிப்பவா் தி. சரவணன் (45). எல்ஐசி ஏஜெண்டான இவா் சமயபுரத்துக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு வியாழக்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து இரும்பு அலமாரியில் இருந்த 7 பவுன் நகைகள், ரூ. 5000 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவா் கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.