திருச்சியில் இருந்து தோகாவுக்கு போலி கடவுச்சீட்டில் செல்ல முயன்ற புதுக்கோட்டை இளைஞரை விமான நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை அபுதாபிக்கு ஏா் இந்தியா விமானத்தில் செல்ல இருந்த புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி விலன் தெருவைச் சோ்ந்த அகமது கரீம் மகன் முகமது அலி (20) போலி பெயரில் கடவுச்சீட்டு பெற்றிருந்தது குடியேற்றப்பிரிவு அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அவரை விமான நிலைய போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.