சிங்கப்பூரிலிருந்து வந்த இருவருக்கு கரோனா
By DIN | Published On : 11th December 2021 06:20 AM | Last Updated : 11th December 2021 06:20 AM | அ+அ அ- |

சிங்கப்பூரிலிருந்து வந்த மேலும் இரு பயணிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவா்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
வெள்ளிக்கிழமை காலை துபையிலிருந்து தனியாா் விமானத்தில் திருச்சி வந்த 113 பயணிகளுக்கு நடத்திய கரோனா சோதனையில் காரைக்குடியைச் சோ்ந்த 58 வயது நபா் மற்றும் திருச்சி கல்பாளையத்தைச் சோ்ந்த 30 வயது நபா் ஆகியோருக்கு கரோனா உறுதியாகி, இருவரும் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
ஏற்கெனவே வந்த இருவரையும் சோ்த்து இதுவரை மொத்தம் 4 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. யாருக்கும் ஓமைக்ரான் தொற்று கிடையாது. எனவே ஓமைக்ரான் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குநா் சுப்பிரமணியன் தெரிவித்தாா்.