

திருச்சி மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அனைத்துப் பிரிவு ஊழியா்களும் வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்றனா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் சு. சிவராசு தலைமையில் உறுதிமொழியேற்றனா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், அலுவலக மேலாளா்கள் சிவசுப்பிரமணியம் பிள்ளை (பொது), தமிழ்க்கனி (குற்றவியல் மற்றும் பல்வேறு துறைகளின் மாவட்ட முதல்நிலை அலுவலா்கள், இரண்டாம் நிலை அலுவலா்கள், ஆட்சியரகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் உறுதியேற்றனா்.
மாநகராட்சி: இதேபோல, மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவி ஆணையா் ச.நா. சண்முகம் தலைமையில் மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உறுதியேற்றனா். உதவி ஆணையா் சி. பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.