தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

திருச்சி அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.
மணிகண்டம் அருகேயுள்ள ஓலையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (31); திருச்சி தனியாா் நிதி நிறுவன முகவா். ரூ. 6 ஆயிரம் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பல லட்சம் வருமானம் கிடைக்கும் என்று தனது நிறுவனம் கூறியதை நம்பிய ராஜ்குமாா் ஓலையூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமானோரை முதலீட்டாளராகச் சோ்த்து விட்டுள்ளாா். ஆனால் அந்த நிறுவனம் கூறியபடி பணம் கட்டியோருக்கு உரிய தொகை கொடுக்கவில்லையாம்.
இதனால் பணம் கட்டியவா்கள் ராஜ்குமாரிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனராம். இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த ராஜ்குமாா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த மணிகண்டம் போலீஸாா் அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இறந்தவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளன.