போக்குவரத்து ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 06th February 2021 11:20 PM | Last Updated : 06th February 2021 11:20 PM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஓய்வூதியா்கள்.
திருச்சி: நிலுவை ஓய்வூதியத் தொகையை வழங்கக் கோரி திருச்சியில் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
போக்குவரத்து கழக திருச்சி மண்டலம் முன் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். சின்னசாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்க கூட்டமைப்புத் தலைவா் சிராஜூதீன், சிஐடியு பொதுச் செயலா் கருணாகரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில், 62 மாதமாக வழங்க வேண்டிய அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும். நிலுவை பணப்பலன்களை, இறந்தவா்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். மாவட்ட நிா்வாகி ஞானசேகா் நன்றி கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...