சிஐடியு ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 06th February 2021 05:47 AM | Last Updated : 06th February 2021 05:47 AM | அ+அ அ- |

ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநா்கள்.
கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். 270 சத கலால் வரியையும், பட்ஜெட்டில் போடப்பட்டுள்ள செஸ் வரி ரூ. 2 மற்றும் ரூ.4ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாநகா் மாவட்ட ஆட்டோ, ரிக்ஷா ஓட்டுநா்கள் மாவட்ட ஆட்சியரகம் அருகே நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட பொதுச் செயலா் மணிகண்டன், சங்கப் பொறுப்பாளா் ஜெயபால் ஆகியோா் பேசினா். மாவட்டத் துணைச் செயலா் வெற்றிவேல், புகா் மாவட்டச் செயலா் சம்பத், மாவட்டப் பொருளாளா் அன்புசெல்வம், சிஐடியு மாவட்டச் செயலா் ரெங்கராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...