பாஜக நிா்வாகிகள் மீது நடவடிக்கை கோரி மனு
By DIN | Published On : 06th February 2021 05:41 AM | Last Updated : 06th February 2021 05:41 AM | அ+அ அ- |

நபிகள்நாயகம் குறித்து தரக்குறைவாகப் பேசியதால் கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகா் கல்யாணராமன் உள்ளிட்ட இருவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யக் கோரி யுனிவா்சல் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் மாநகர காவல் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
அமைப்பின் மாநில தலைவா் முகமது ரபி தலைமையில் மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதனை சந்தித்து கல்யாணராமன் உள்பட இருவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யக் கோரி மனு அளித்தனா். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையா் உறுதியளித்தாா். மாநிலச் செயலா் அப்பாஸ், மாநில பொருளாளா் பக்ருதீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...