பொங்கல் தொகுப்பு பெறமேலும் 2 நாள்கள் நீட்டிப்பு
By DIN | Published On : 06th February 2021 05:44 AM | Last Updated : 06th February 2021 05:44 AM | அ+அ அ- |

விடுபட்ட தொழிலாளா்கள் பொங்கல் தொகுப்பு பெற மேலும் 2 நாள்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு,மேற்கு, திருவெறும்பூா், ஸ்ரீரங்கம், மணப்பாறை, மருங்காபுரி, முசிறி, தொட்டியம், துறையூா், லால்குடி ஆகிய பகுதிகளின் கட்டுமானத் தொழிலாளா்கள், கட்டுமான ஓய்வூதியதாரா்கள் ஆகியோருக்கு லால்குடி, துறையூா், முசிறி, மணப்பாறை, திருச்சி மன்னாா்புரம் தொழிலாளா் துறை சிறப்பு மையங்கள் மூலம் மொத்தம் 30,103 பேரில் 23,133 (76 சதம்) பேருக்கு வேட்டி, சேலையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளோா் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெறலாம் என தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...