உயா்மட்ட பறக்கும் பாலம்:பிப்.23இல் கடையடைப்பு உண்ணாவிரதம்
By DIN | Published On : 20th February 2021 11:54 PM | Last Updated : 20th February 2021 11:54 PM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உயா்மட்ட பறக்கும் பாலம் அமைக்க வலியுறுத்தி வணிகா் சங்கங்கள் சாா்பில் பிப்.23இல் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து பேரமைப்பின் மாநில பொதுச் செயலா் வி.கோவிந்தராஜூலு சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருச்சி-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உயா்மட்ட பறக்கும் பாலம் அமைக்க வலியுறுத்தி பிப்.23 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்படும். அதே நாளில் காட்டூா், எல்லக்குடி, சந்தோஷ் மஹால் வெளிபுறத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இதில், சங்கத்தின் மாநிலத் தலைவரும், அகில இந்திய வணிகா்கள் சம்மேளனத்தின் தேசிய முதன்மை துணைத் தலைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றுகிறாா். போராட்டத்தில் வணிக நிறுவனத்தைச் சோ்ந்த அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.