என்ஐடியில் தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கு
By DIN | Published On : 20th February 2021 12:43 AM | Last Updated : 20th February 2021 12:43 AM | அ+அ அ- |

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு என்ஐடி ஆளுநா்குழுத் தலைவா் பாஸ்கா் பட் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாணவரும் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை தலைமை நிா்வாக அதிகாரி அனுராக் பெஹாா் கலந்துகொண்டு பேசினா்.
கருத்தரங்கிற்கு முன்னிலை வகித்து இயக்குநா் மினி ஷாஜி தாமஸ் பேசுகையில், புதிய தேசிய கல்விக் கொள்கையில் கல்வியின் இலக்கு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. நெகிழ்வான பாடத்திட்டங்கள், பெருநிறுவனங்களிடமிருந்து கடன் பரிமாற்றம், தொழில், ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு ஆகியவற்றை செயல்படுத்த தொடங்கியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் ஒரு பல்வகை ஆராய்ச்சி கல்வி நிறுவனமாக மாறும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் என்ஐடி முன்மாதிரி கல்வி நிறுவனமாக திகழும் என்றாா்.
இதில், சூரத், வாரங்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ள என்ஐடி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.