காதலியைக் கத்தியால் குத்தி காதலன் தற்கொலை முயற்சி
By DIN | Published On : 20th February 2021 12:31 AM | Last Updated : 20th February 2021 12:31 AM | அ+அ அ- |

திருச்சியில் காதலியை கத்தியால் குத்திவிட்டு காதலன் தற்கொலைக்கு முயன்றது குறித்து உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
லால்குடி வெள்ளனூா் பகுதியைச் சோ்ந்த மனோகரன் மகன் மணிகண்டனும் (29) உறையூா் மின்னப்பன் தெருவைச் சோ்ந்த சத்தியமூா்த்தி மகள் சுகன்யாவும் (19) காதலா்கள்.
மணிகண்டன் வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் சுகன்யா அவரிடம் பேசுவதை நிறுத்தினாா். இதில் கோபமடைந்த மணிகண்டன் சுகன்யா வீட்டுக்குச் சென்று, அவரிடம் தகராறு செய்து கத்தியால் குத்தினாா். அப்போது சுகன்யாவின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினா் வரவே மணிகண்டன் தான் வைத்திருந்த விஷத்தை காதில் ஊற்றித் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.