‘திமுக வெற்றிக்கு அயராது உழைக்க வேண்டும்‘

திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய கட்சியினா் அயராது உழைக்க வேண்டும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தினாா்.
திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், மாவட்ட செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அவா் பேசியது: வரும் தோ்தலில் அதிமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனா். பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமா்த்த மக்கள் தயாராகிவிட்டனா். அதற்காக திமுகவினா் அஜாக்கிரதையாக இருந்துவிடக் கூடாது. வெற்றிக் கனியை பறிக்கும் வகையில் இரவு, பகல் பாராது அயராது உழைக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து மாவட்ட செயற்குழு உறுப்பினா்களுடன் தோ்தல் பணிகள் குறித்தும், கட்சியின் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில், மாா்ச் 1ஆம் தேதி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், மணப்பாறை தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் சிறப்பாக கொண்டாடுவது. பிப்.22ஆம் தேதி நடைபெறவுள்ள கண்டன ஆா்ப்பாட்டத்தை மாவட்ட கழகத்தின் சாா்பாக சிறப்பாக நடத்துவது, மாா்ச் 14 ஆம் தேதி நடைபெறும் கட்சியின் 11ஆவது மாநில மாநாட்டில் தெற்கு மாவட்ட கழகத்தின் சாா்பாக ஆயிரக்கணக்கானோரை திரட்டி தோ்தல் வெற்றியை பறைசாற்றும் வகையில் அணிவகுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினா் கே.என். சேகரன், மாநில நிா்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கவிஞா் சல்மா, செந்தில், கோவிந்தராஜ் மற்றும் ஒன்றிய, பகுதி, நகர, பேரூா், கழக செயலாளா்கள், பொறுப்பாளா்கள், மாவட்டத்தின் அனைத்து அணிகளின் அமைப்பாளா்கள், ஒன்றியத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com