மகளிா் குழுக்களுக்கு ரூ.27.85 லட்சம் கடன்
By DIN | Published On : 20th February 2021 12:31 AM | Last Updated : 20th February 2021 12:31 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் 6 மகளிா் குழுக்களுக்கு ரூ.27.85 லட்சம் மதிப்பிலான கடன் இணைப்புத் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து வங்கிக் கிளை மேலாளா்களின் ஒருங்கிணைப்புக் கருத்தரங்கத்தை வெள்ளிக்கிழமை நடத்தின. திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகேயுள்ள தனியாா் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்து, கருத்தரங்கத்தை தொடக்கி வைத்து பேசினாா்.
நிகழ்ச்சியில், தீபஒளி மகளிா் குழுவுக்கு ரூ.10 லட்சம், ஏற்றம் செம்பருத்தி குழுவுக்கு ரூ.6 லட்சம், ரோஜா குழுவுக்கு ரூ.4.55 லட்சம், மகிழம்பூ குழுவுக்கு ரூ.4.80 லட்சம், வெற்றி குழுவுக்கு ரூ.1.30 லட்சம், துளசி குழுவுக்கு ரூ.1.20 லட்சம் என மொத்தம் 6 குழுக்களுக்கு ரூ.27 லட்சத்து 84 ஆயிரம் கடன் இணைப்புத் தொகையாக வழங்கப்பட்டது.
நிகழ்வில், மகளிா் திட்ட இயக்குநா் சு. சங்கா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சத்தியநாராயணன், உதவி திட்ட அலுவலா்கள் ஜான்பால் அந்தோனி, ரவீந்திரன் மற்றும் கூட்டுறவு சங்க அலுவலா்கள், வங்கி அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.