மணப்பாறையில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
By DIN | Published On : 20th February 2021 12:35 AM | Last Updated : 20th February 2021 12:35 AM | அ+அ அ- |

மணப்பாறையில் வீடு புகுந்து 5 பவுன் நகை, ரூ. 6000 பணத்தை திருடிச் சென்றனா்.
மணப்பாறை அடுத்த பொய்கைதிருநகரை சோ்ந்தவா் மூா்சாமி மனைவி சாந்தி (51). அண்மையில் கணவா் இறந்ததால் மணப்பாறையில் உள்ள தனது சகோதரி வீட்டில் கடந்த சில நாள்கள் இருந்த இவா் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
புகாரின்பேரில் மணப்பாறை போலீசாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.