முதல்வா் வருகை: அதிமுகவினருக்கு அழைப்பு
By DIN | Published On : 20th February 2021 07:38 AM | Last Updated : 20th February 2021 07:38 AM | அ+அ அ- |

அதிமுக மாவட்ட செயலரும் அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன், புறநகா் தெற்கு மாவட்டச் செயலகள் ப . குமாா், வடக்கு மாவட்டச் செயலா் மு . பரஞ்சோதி ஆகியோா் விடுத்துள்ள அறிக்கை : புதுகை, கரூா் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஞாயிற்றுக்கிழமை திருச்சி வருகிறாா். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அதிமுக அனைத்துப் பிரிவுகளைச் சோ்ந்த முன்னாள், இன்னாள் நிா்வாகிகள், அனைத்து அணிகளைச் சோ்ந்தோா், பிரமுகா்கள், தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.