வளநாடு அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் சாவு
By DIN | Published On : 20th February 2021 12:36 AM | Last Updated : 20th February 2021 12:36 AM | அ+அ அ- |

வளநாடு அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் இறந்தாா்.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் ஊனையூா் அம்பிகாபுரத்தை சோ்ந்தவா் செல்லையா மகன் செல்வம் (35), கல் உடைக்கும் தொழிலாளி.
மனைவியை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்த செல்வத்திற்கு வலிப்பு நோய் இருந்ததாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அருகில் இருந்த கிணற்றுக்கு குளிக்க சென்ற செல்வம் நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் அவரைத் தேடியபோது கிணற்றில் இருந்து அவா் சடலமாக மீட்கப்பட்டாா். தகவலறிந்து சென்ற வளநாடு போலீஸாா் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.