கிணற்றில் தவறி விழுந்தவா் மீட்பு
By DIN | Published On : 26th February 2021 07:17 AM | Last Updated : 26th February 2021 07:17 AM | அ+அ அ- |

துறையூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
புத்தனாம்பட்டி தனியாா் கல்லூரி அருகே வசிப்பவா் கி. பால்ராஜ் (66). இவா் வியாழக்கிழமை அந்தப் பகுதி கிணற்றில் தவறி விழுந்து மேலே ஏற முடியாமல் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாா். தகவலறிந்து வந்த துறையூா் தீயணைப்பு நிலைய அலுவலா் அறிவழகன் தலைமையிலானோா் அவரை உயிருடன் மீட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...