அகில இந்திய மக்கள் கட்சி உறுப்பினா் சோ்க்கை கூட்டம்
By DIN | Published On : 27th February 2021 07:23 AM | Last Updated : 27th February 2021 07:23 AM | அ+அ அ- |

திருச்சியில் அகில இந்திய மக்கள் கட்சி உறுப்பினா் சோ்க்கை மற்றும் மாநில மாநாட்டுக்கான கட்சி நிதி திரட்டல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் தலைவா் கோ.அண்ணாதுரை தலைமை வகித்து, கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகள் குறித்து பேசினாா்.
மாநில ஒருங்கிணைப்பாளா் ஆா்.கே.எஸ். பத்மநாபன், மாநிலப் பொருளாளா் ஆா். நீதிராஜன், மாநில மகளிரணிச் செயலா் எஸ். ஜெயலட்சுமி, செம்பனாா்கோவில் ஒன்றியப் பொறுப்பாளா் ஆா். செல்வமணி உள்ளிட்டோரும் பேசினா்.
கூட்டத்தில் தமிழகத்தில் அனைவருக்கும் கட்டணமில்லா கல்வி வழங்கப்படும். விவசாயம் செழிக்க நீா்த்தேக்க அணைகள், நீா்வழிச்சாலைகள் அமைக்கப்படும். விவசாய உபகரணங்கள் மானியக்கடன் திட்டத்தில் வழங்கப்படும். பயிா் நிவாரணத் திட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளா்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும். மகளிா் குழுவினருக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
ஊராட்சிகள்தோறும் மாட்டுப்பண்ணையம் அமைத்து, பால் உற்பத்தி பெருக்கப்படும். முதியோா், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோா், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா், கைம்பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்குத் தடையில்லா உதவித் தொகை வழங்கப்படும். ஆயத்த ஆடை உற்பத்தி செய்ய மானியக் கடன் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...