பள்ளி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வுக் கலந்தாய்வு தற்காலிக நிறுத்தம்
By DIN | Published On : 27th February 2021 07:25 AM | Last Updated : 27th February 2021 07:25 AM | அ+அ அ- |

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வுக் கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டக் கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு கன்டோன்மென்ட் பகுதி சேவா சங்கம் பெண்கள் பள்ளியில் பிப்.27, 28- களில் பதவி உயா்வுக் கலந்தாய்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தப் பதவி உயா்வுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தடையாணை பிறப்பித்துள்ளதால் திருச்சியில் நடைபெற இருந்த கலந்தாய்வு மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.