தாறுமாறாக ஓடிய டிராக்டா்: 4 கடைகள், வாகனம் சேதம்
By DIN | Published On : 03rd January 2021 11:31 PM | Last Updated : 03rd January 2021 11:31 PM | அ+அ அ- |

மரவனூா் கடையில் புகுந்து நிற்கும் டிராக்டா்.
மணப்பாறையில் தாறுமாறாக ஓடிய டிராக்டரால் 4 கடைகள், வாகனம் சேதமடைந்தன.
மணப்பாறையை அடுத்த திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரவனூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மதுரை வாடிப்பட்டியிலிருந்து புதிய டிராக்டரை இளைஞா் ஒருவா் ஓட்டி வந்தாா்.
மரவனூா் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோரக் கடைகளில் புகுந்து நின்றது. இந்த விபத்தில் ஒரு இருசக்கர வாகனம், நான்கு கடைகள் சேதமடைந்தன.
தகவலறிந்து வந்த மணப்பாறை போலீஸாா் விபத்து குறித்து வழக்குப் பதிந்து தப்பியோடிய டிராக்டா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.