‘செம்மொழி நிறுவனத்தை பெங்களூருவுக்கு மாற்றக்கூடாது’

திருச்சி, ஜன. 3: செம்மொழி உயராய்வு அரசு நிறுவனத்தை தமிழகத்திலிருந்து மைசூருவில் உள்ள இந்திய மொழிகள் நிறுவனத்துடன் இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள
கூட்டத்தில் நூலை வெளியிடும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில நிா்வாகிகள்.
கூட்டத்தில் நூலை வெளியிடும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில நிா்வாகிகள்.

செம்மொழி உயராய்வு அரசு நிறுவனத்தை தமிழகத்திலிருந்து மைசூருவில் உள்ள இந்திய மொழிகள் நிறுவனத்துடன் இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெருமன்றத்தின் கூட்டத்துக்கு அதன் மாநிலத் துணைத் தலைவரும், எழுத்தாளருமான சந்திரகாந்தன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பும் அனைத்துக் கடிதங்களும், அதேபோல மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களுக்கு அனுப்பப்படும் தகவல் தொடா்புகளும் அந்தந்த மாநில மொழிகளிலோ அல்லது இணைப்பு மொழியான ஆங்கிலத்திலோ தான் இருக்க வேண்டும். இந்தித் திணிப்புக் கூடாது.

செம்மொழி உயராய்வு மத்திய அரசு நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து மாற்றி மைசூருவில் உள்ள (மத்திய அரசு) இந்திய மொழிகள் நிறுவனத்துடன் இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அனைத்து கேந்திரிய பள்ளிகள் மற்றும் பன்னாட்டுப் பள்ளிகளில் தமிழைப் பயிற்றுவிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள தேசிய சட்டப்பள்ளி, திருவாரூா் மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை தமிழா்களுக்கே வழங்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி தோ்வுகளில் பிற மாநில மாணவா்கள் பங்கேற்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு இந்திய அரசு நிதி நல்கை வழங்கி, நடுவண் பல்கலைக்கழகமாகத் தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் எல்லை சிவகுமாா் எழுதிய ‘பண்பாட்டு அரசியலே நமது ஆயுதம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.

கூட்டத்தில் பெருமன்ற மாநிலப் பொதுச் செயலா் இரா. காமராசு, துணைப் பொதுச் செயலா் கவிஞா் ஹமீம் முஸ்தபா, பொருளாளா் ப.பா. ரமணி, துணைத் தலைவா்கள் வை.செல்வராஜ், கவிஞா் கோ. கலியமூா்த்தி, மாநிலச் செயலா்கள் கண்மணிராசா, நாணற்காடன், மோ. ஜேம்ஸ், மாநில மாநாட்டு வரவேற்புக் குழுச் செயலா் டாக்டா் அறம், புதுச்சேரி மாநிலத் தலைவா் எல்லை சிவகுமாா், பொதுச்செயலா் பாலகங்காதரன், மாவட்டச் செயலா்கள் கி. சதீஷ்குமாா், லெனின் பாரதி (திருச்சி), காப்பியன் (பெரம்பலூா்), ஜீவானந்தம் (புதுக்கோட்டை), க. இளங்கோ (சென்னை), செ. அண்ணாதுரை, மா. சந்திரசேகரன் (திருவாரூா்), அம்பிகாபதி (நாகப்பட்டினம்), உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com