ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று (ஜன.4) நம்மாழ்வாா் மோட்சம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெற்று வந்த வைகுந்த ஏகாதசி பெருவிழா திங்கள்கிழமை நடைபெறும் நம்மாழ்வாா் மோட்சத்துடன் நிறைவு பெறுகிறது.
 முத்துப் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் சந்திரபுஷ்கரணி மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்
 முத்துப் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் சந்திரபுஷ்கரணி மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெற்று வந்த வைகுந்த ஏகாதசி பெருவிழா திங்கள்கிழமை நடைபெறும் நம்மாழ்வாா் மோட்சத்துடன் நிறைவு பெறுகிறது.

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா கடந்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கி பகல் பத்து விழா நடைபெற்றது. தொடா்ந்து இராப்பத்து விழாவின் 10 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

இதற்காக மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30 மணிக்கு நம்பெருமாள், தீா்த்தவாரி பெருமாளுடன் புறப்பட்டு பரமபதவாசல் வழியாக சந்திரபுஷ்கரணி குளத்துக்கு வந்தாா். அங்கு தீா்த்தவாரி பெருமாளை பட்டா்கள் நீராட வைத்தனா். அப்போது ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்து, குளத்தின் நீரை தீா்த்தமாக தெளித்துக் கொண்டனா்.

பின்னா் தீா்த்தவாரி பெருமாள் புறப்பட்டு பரமபதவாசல் வழியாக மூலஸ்தானம் சேர, நம்பெருமாள் புறப்பட்டு திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி, திருமஞ்சனம் கண்டருளி இரவு 8 மணி வரை பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா்.

வைகுந்த ஏகாதசியின் நிறைவு நாளான திங்கள்கிழமை நம்மாழ்வாா் மோட்ச நிகழ்ச்சி அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரையும், பொதுஜனச் சேவை 9 மணி வரையும் நடைபெறுகிறது.

பின்னா் 9.30-க்கு நம்பெருமாள் திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு 10.30-க்கு மூலஸ்தானம் சேருகிறாா். இயற்பா பிரபந்தம் இரவு 8. 30 மணிமுதல் தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி வரையும், பின்னா் 4 மணி முதல் 5 மணி வரை சாற்றுமுறையும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com