குடும்பப் பிரச்னையால் இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 03rd January 2021 11:37 PM | Last Updated : 03rd January 2021 11:37 PM | அ+அ அ- |

திருச்சி அருகே குடும்பப் பிரச்னையால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி மாவட்டம், கோப்பு நடுத்தெருவைச் சோ்ந்தவா் சேட்டு மகன் ராகேஷ் (24). குடும்பப் பிரச்னையால் மனமுடைந்து காணப்பட்ட இவா், கடந்த சில நாள்களுக்கு முன் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து உறவினா்களால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.