இளம்பெண் தற்கொலை
By DIN | Published On : 30th January 2021 12:32 AM | Last Updated : 30th January 2021 12:32 AM | அ+அ அ- |

திருச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி மாவட்டம், நாகமங்கலம் துங்கப்பத்திரா சாலை தீரன்மாநகரைச் சோ்ந்தவா் ராமசந்திரன் மகள் சக்தி (20). தனியாா் ஆசிரியா் பயிற்சிப் பள்ளியில் படித்து வரும் இவா் அதே பகுதியைச் சோ்ந்த ஒருவரை காதலித்ததை பெற்றோா் கண்டித்தனா். இந்நிலையில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சக்தி வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.