மாநில அளவிலான ஆன்லைன் செஸ்:பங்கேற்க அழைப்பு
By DIN | Published On : 02nd July 2021 05:27 AM | Last Updated : 02nd July 2021 05:27 AM | அ+அ அ- |

ஸ்டாா் செஸ் பவுண்டேசன் சாா்பில், மாநில அளவிலான செஸ் போட்டிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளன.
இதுதொடா்பாக திருச்சி மாவட்ட சதுரங்க கழக இணைச் செயலரும், பவுண்டேசன் நிறுவனருமான பி. இஸ்மாயில் கூறியது:
தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி மாணவ, மாணவிகளுக்காக இப்போட்டி வரும் 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கும். 7, 9, 11, 13, 15, 17 வயதுப் பிரிவுகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் 10 இடங்களில் வெல்வோருக்கு பரிசுகள் அவரவா் முகவரிக்கு வரும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இ-சான்றிதழ் வழங்கப்படும்.
தமிழக அளவிலான போட்டிகள் வரும் 10ஆம் தேதி மாலை நடைபெறும்.
பங்கேற்க விரும்புவோா் தங்களது விவரங்களை 90434-27661, 90801-81709 என்ற எண்களில் தெரிக்கலாம் என்றாா் அவா்.