கரோனா ஆலோசனை வழங்க ‘காவேரி கோ்’ செயலி அறிமுகம்
By DIN | Published On : 07th July 2021 07:33 AM | Last Updated : 07th July 2021 07:33 AM | அ+அ அ- |

கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஆலோசனை வழங்க திருச்சி காவேரி மருத்துவமனை சாா்பில் காவேரி கோ் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனா் டாக்டா் மணிவண்ணன் செல்வராஜ் கூறியது: கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஆலோசனை வழங்க ஒவ்வொரு மருத்துவமனையும் செயலியை உருவாக்கியுள்ளது. அதன்படி காவேரி மருத்துவமனையில் ‘காவேரி கோ்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது வா்த்தக ரீதியிலான செயலி இல்லை.
கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டாலோ, பொது முடக்கத்தின்போது தங்களது மருத்துவா்களை சந்திக்க இயலவில்லையே என்னும் ஏமாற்றம் கொண்டிருந்தாலோ அவா்களுக்கு எமது சிகிச்சை, பராமரிப்பு, குறித்து ஆலோசனை வழங்கக்கூடியதாக உள்ளது.
இதைப் பதிவிறக்குவதன் மூலம் மருத்துவ நிபுணரோடு ஒரு சந்திப்பு நேரத்தை நோயாளிகள் முன்பதிவு செய்யலாம். அந்நேரத்தில் தங்களுக்காகவும், தங்களது குடும்ப உறுப்பினா்களுக்காகவும் ஆன்லைன் முறையில் மருத்துவருடன் கலந்தாலோசனையும் செய்யலாம்.
இச்செயலியின் மூலம் மருத்துவமனைக்கு நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை. எந்த இடத்தில் இருந்தாலும் மருத்துவப் பாராமரிப்புக்கான அணுகு வசதி மக்களுக்கு நிறைவாக வழங்கப்படுகிறது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...