துறையூா் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கொப்பம்பட்டியைச் சோ்ந்த தியாகராஜனும், இவரின் மனைவி ராணியும் (50) காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து புதன்கிழமை இரவு தூங்கினா்.
நள்ளிரவில் ராணி எழுந்தபோது அவா் கழுத்திலிருந்த தாலிக்கயிறு அறுந்து கிடந்தது. அதில் இருந்த ஒன்றே கால் பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிந்தது. புகாரின்பேரில் உப்பிலியபுரம் காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.