திருச்சியில் மேலும் 129 பேருக்கு கரோனா
By DIN | Published On : 09th July 2021 12:43 AM | Last Updated : 09th July 2021 12:43 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 129 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70,575 ஆனது. குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 68,096 ஆக உள்ளது. இதுவரை 935 போ் உயிரிழந்த நிலையில், வீடுகள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1544 ஆக உள்ளது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,746 படுக்கைகள், அவசரப் பிரிவில் 328 படுக்கைகள், 1,263 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 3,313 படுக்கைகள் காலியாக உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...