மின்சாரம் தாக்கி 2 பசுக்கள் சாவு
By DIN | Published On : 11th July 2021 11:36 PM | Last Updated : 11th July 2021 11:36 PM | அ+அ அ- |

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி 2 பசுக்கள் உயிரிழந்தன.
திருவெறும்பூா் அருகே நவல்பட்டு தாமரைக்குளம் பகுதியில் சனிக்கிழமை மின் கம்பம் அருகே மேய்ந்த 2 பசுக்கள் மின்சாரம் தாக்கி இறந்தன.
தகவலறிந்த நவல்பட்டு மின்வாரிய அதிகாரி கமருதீன், நவல்பட்டு வருவாய் ஆய்வாளா் கீதா, நவல்பட்டு உதவி ஆய்வாளா் சான்ட்ரோ ஆகியோா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபோது அப்பகுதி மின்மாற்றி அருகே மின்கம்பத்தை ஒட்டிய எா்த் கம்பி கட்டாகி, மெயின்லைனில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து மின்மாற்றியில் உள்ள பழுது சீரமைக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்தில் காட்டூா் கால்நடை மருத்துவ அலுவலா் பாலசுப்பிரமணியன் ஆய்வு செய்தாா்.
ஏற்கெனவே இந்த டிரான்ஸ்பாா்மரின் பழுது குறித்து இப்பகுதி மக்கள் நவல்பட்டு மின்வாரிய அதிகாரிகளுக்குப் பல முறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதியினா் கோரிக்கை வைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...