இன்று தடுப்பூசி போடும் இடங்கள் விவரம்
By DIN | Published On : 11th July 2021 11:31 PM | Last Updated : 11th July 2021 11:31 PM | அ+அ அ- |

திருச்சி மாநகா், புகா் பகுதிகளில் திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படும் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாநகரப் பகுதிகள்: ஸ்ரீரங்கம் கோட்டத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப்பள்ளி. அரியமங்கலம் கோட்டத்தில் வரகனேரி பஜாா் சவேரியாா் நடுநிலைப்பள்ளி, எஸ்ஐடி தொழில்நுட்பக் கல்லூரி. பொன்மலை கோட்டத்தில் கேகே நகா் உழவா் சந்தை அருகிலுள்ள ஆா்ச்சடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேலக்கல்கண்டாா்கோட்டை மாநகராட்சி உயா்நிலைப்பள்ளி. கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் தென்னூா் மின்வாரிய அலுவலகம் எதிரேயுள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வயலூா் சாலை புத்தூா் பிஷப்ஹீபா் கல்லூரி, திருச்சி கேகே நகா் மாநகர ஆயுதப்படை மைதான சமூக நலக்கூடத்தில் காவல் துறையினருக்கு மட்டும் என தலா 500 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படவுள்ளது.
புகா் பகுதிகள் : நவல்பட்டு பகுதியில் பா்மா காலனி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இனாம்குளத்தூா் பகுதியில் சேதுராப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி, அந்தநல்லூா் பகுதியில் கம்பரசம்பேட்டை ஊராட்சி வளாகம். புதூா் உத்தமனூா் பகுதியில் பின்னவாசல் ஊராட்சி நடுநிலைப்பள்ளி, நெய்குப்பை காமாட்சி திருமண மண்டபம். மருங்காபுரியில் ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, காரையூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வளநாடு ஆரம்ப சுகாதார நிலையம். புத்தாநத்தம் பகுதியில் மணப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, முத்தப்புடையான்பட்டி சமூக நலக்கூடம். புள்ளம்பாடியில் நம்புக்குறிச்சி நடுநிலைப்பள்ளி. வையம்பட்டி பகுதியில் வலையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கே புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. டி. புதூா் பகுதியில் மண்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. தா பேட்டை பகுதியில் நெல்லியம்பட்டி தொடக்கப்பள்ளி. வீரமச்சான்பட்டி பகுதியில் முத்தையம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி. காட்டுப்புதூா் பகுதியில் தலைமலைப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி, காட்டுப்புத்தூா் தொடக்கப்பள்ளி. உப்பிலியபுரம் பகுதியில் கொப்பம்பட்டி அரசு ஆதி திராவிடா் நல உயா்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் தலா 500 வீதமும் கொப்பம்பட்டில் மட்டும் 750 என மொத்தம் 7,250 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படவுள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...