கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
By DIN | Published On : 11th July 2021 12:18 AM | Last Updated : 11th July 2021 12:18 AM | அ+அ அ- |

வரும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ள கால்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டை பூா்விகமாகக் கொண்டு ஏதேனும் ஒரு துறையில் வீரதீரச் செயல் புரிந்த பெண்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது முதல்வரால் சுதந்திர தினவிழாவில் வழங்கப்படவுள்ளது.
தகுதி வாய்ந்த பெண்கள் தங்கள் கருத்துருவை மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு வரும் 17-ஆம் தேதிக்குள் வந்த சேர வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை 0431-2413796 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...