சுற்றுலா துறையினருக்குசிறப்பு தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 11th July 2021 12:13 AM | Last Updated : 11th July 2021 12:13 AM | அ+அ அ- |

சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு வரும் 14ஆம் தேதி சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சுற்றுலா இடங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து அந்தத் தொழிலைச் சாா்ந்தோருக்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது.
இதன்படி மத்தியப் பேருந்துநிலையம் அருகேயுள்ள தமிழ்நாடு ஹோட்டல் வளாகத்தில் வரும் 14ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு இந்த முகாம் நடைபெறுகிறது.
இதில் மாவட்டத்தில் சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ள விடுதி நிா்வாகிகள், பணியாளா்கள், பயண முகவா்கள், சுற்றுலா வழிகாட்டிகள், டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள் ஆகியோா் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
பயனாளிகள் தங்களது ஆதாா் அட்டை, பணிபுரியும் அடையாள அட்டை, செல்லிடபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் வர வேண்டும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...