பூட்டிய வீடுகளில் மின் வயா் திருடியவா் கைது
By DIN | Published On : 20th June 2021 01:20 AM | Last Updated : 20th June 2021 01:20 AM | அ+அ அ- |

திருச்சி அருகே பூட்டிய வீடுகளில் மின் வயரை திருடிய இளைஞரை நவல்பட்டு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அருகே உள்ள கும்பக்குடி ஊராட்சி அண்ணா நகா் பகுதியில் தொடா்ந்து பூட்டியிருக்கும் வீடுகளில் மின் வயா் திருட்டு நடைபெற்று வந்தது. அதேபோல் ஊராட்சிக்கு குடிநீா் விநியோகம் செய்யும் மோட்டாா் வயா்களும் அண்மையில் திருடப்பட்டிருந்தது.
இதுபற்றி கும்பகுடி ஊராட்சி மன்ற துணைத்தலைவா் அருண்குமாா் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் நவல்பட்டு ஆய்வாளா் வெற்றிவேல் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி ஏற்கனவே இருவரை கைது செய்து சிறையிலடைத்தனா்.
மேலும் இச்சம்பவத்தில் தொடா்புடைய புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூா் பகுதியை சோ்ந்த பாலசுப்பிரமணியன் (30) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும் அவரிடமிருந்து திருடப்பட்ட வயா்கள் பறிமுதல் செய்யப்பட்டது.