தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவி
By DIN | Published On : 20th June 2021 01:23 AM | Last Updated : 20th June 2021 01:23 AM | அ+அ அ- |

திருச்சி பெரியமிளகுபாறையில் தீவிபத்தில் வீட்டை இழந்தவா்களுக்கு நிவாரண உதவி வழங்குகிறாா் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு.
திருச்சியில், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு உதவிகள் வழங்கினாா்.
திருச்சி மேற்கு சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பெரியமிளகு பாறை, நாயக்கா் தெருவில் வசித்து வருபவா் ஜீவா சின்னதுரை. இவரது குடிசை வீடானது சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய வீரா்கள், உடனடியாக தீயை அணைத்தனா். இருப்பினும், குடிசை முழுவதும் எரிந்து நாசமானது. வீட்டிலிருந்த பொருள்களும் தீயில் கருகின.
இதுகுறித்து தகவல்அறிந்த அமைச்சா் கே.என். நேரு, விரைந்து வந்து ஜீவா சின்னதுரை ஆறுதல் கூறி, ரூ.20 ஆயிரம் மற்றும் அரிசி, மளிகை, காய்கனிகள், படுக்கை விரிப்புகள், புத்தாடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மேலும், தீ விபத்தில் சேதமடைந்த குடிசையை புனரமைத்து தரவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
நிகழ்ச்சியில், அமைச்சருடன் முன்னாள் துணை மேயா் அன்பழகன் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.