ஸ்ரீரங்கத்தில் கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 20th June 2021 01:15 AM | Last Updated : 20th June 2021 01:15 AM | அ+அ அ- |

தடுப்பூசி முகாமில் பெயா் பதிவு செய்யும் பொதுமக்கள்.
ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கம், பொது சுகாதார தடுப்பூசி மருந்துத் துறை ஆகியன இணைந்து தடுப்பூசி முகாமை சனிக்கிழமை நடத்தின.
ஸ்ரீரங்கம் ஸ்ரீ விக்னேஷ் ரங்கா மெட்ரிக் பள்ளியில் நடந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட சுமாா் 600-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் 2-ஆம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டது.
ஏற்பாடுகளை ரோட்டரி சங்கத் தலைவா் எஸ். ஆனந்த், செயலா் ஆா். சத்யநாராயணன், பொருளாளா் சேஷாத்ரி,திட்டத் தலைவா் எஸ். அசோக்குமாா் ஆகியோா் செய்தனா்.