துப்பாக்கி தொழிற்சாலை,ஹெச்ஏபிபி ஊழியா்கள் 2ஆவது நாளாக போராட்டம்
By DIN | Published On : 20th June 2021 01:15 AM | Last Updated : 20th June 2021 01:15 AM | அ+அ அ- |

திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலை, ஹெச்ஏபிபி ஊழியா்கள் 2ஆவது நாளாக சனிக்கிழமை கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள 41 படைக்கலன் தொழிற்சாலைகளை தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து திருச்சியில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலை, ஹெச்ஏபிபி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக சனிக்கிழமை பெருநிறுவனங்கள் கொடும்பாவி உருவ பொம்மையை எரிப்பதற்காக ஊா்வலமாக இரு தொழிற்சாலை ஊழியா்கள் எடுத்து வந்தனா். இதை கண்ட நவல்பட்டு போலீஸாா் பொம்மையை எரிக்க விடாமல் தடுத்து நிறுத்தினா்.