தொற்று அச்சமின்றி மீன்சந்தையில் குவிந்த மக்கள்
By DIN | Published On : 20th June 2021 10:45 PM | Last Updated : 20th June 2021 10:45 PM | அ+அ அ- |

மத்தியப் பேருந்து நிலையத் தற்காலிக மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை மீன் வாங்கக் குவிந்த மக்கள்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் செயல்படும் மீன் சந்தையில் மீன் வாங்க கரோனா அச்சமின்றி பொதுமக்கள் ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
கரோனா பரவுதலை தடுக்கும் விதமாக உறையூா் லிங்கா நகா் பகுதியில் செயல்பட்டு திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ள மீன் சந்தையில் மொத்தம், சில்லறை வியாபாரம் நடைபெறுகிறது.
இங்கு அரசின் கரோனா தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை மீன் வாங்க வந்தோா் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி கூட்டமாக நிற்பதை அதிகளவில் காணமுடிந்தது. கடந்த வாரமும் இதேபோல கூட்டம் கூடிய நிலையில், இந்த வாரம் அதைவிட அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.
எனவே, மாவட்டத்தில் குறைந்து வரும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.