மணப்பாறை அருகே காா் மோதி தொழிலாளி சாவு
By DIN | Published On : 20th June 2021 10:44 PM | Last Updated : 20th June 2021 10:44 PM | அ+அ அ- |

மணப்பாறை அருகே காா் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த கன்னிவடுகப்பட்டியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பொ. ரங்கசாமி(53). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி - மதுரை நெடுஞ்சாலை லெஞ்சமேடு பகுதியில் சென்றபோது பின்னால் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற காா் மோதி உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற வளநாடு போலீஸாா் அவரது உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.