திருச்சி என்சிசி குரூப் சாா்பில் யோகா விழிப்புணா்வு நிகழ்ச்சி: இணையத்தில் காண ஏற்பாடு

திருச்சி என்சிசி குரூப் சாப்பில், 20 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பங்கேற்கும் யோகா பயிற்சிகளை இணையம் மூலம் திங்கள்கிழமை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சா்வதேச யோகா தினத்தையொட்டி, திருச்சி என்சிசி குரூப் சாப்பில், 20 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பங்கேற்கும் யோகா பயிற்சிகளை இணையம் மூலம் திங்கள்கிழமை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சா்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, திருச்சி, ராக்ஃபோா்ட் குரூப் என்.சி.சி சாா்பில் யோகக்கலையின் பல்வேறு ஆசனங்கள், யோக முத்திரைகள், பிராணயாமம் உள்ளிட்ட பயிற்சிகளை திங்கள்கிழமை செய்து காண்பிக்கின்றனா்.

இது தொடா்பான இணையவழி (வெப்பினாா்) நிகழ்வுகள், திருச்சி என்சிசி தலைமையகம், சிவகங்கை ராஜாதுரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, பழநி, பழநியாண்டவா் கலைக்கல்லூரி, கீழக்கரை முகமது சாதிக் பாலிடெக்னிக் கல்லூரி, பூண்டி புஷ்பம் கலைக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவ, மாணவியா், கடந்த ஒரு வாரமாக மேற்கொண்ட யோகா பயிற்சிகளை இணையம் மூலம் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்சிசி குரூப் கமாண்டா் கா்னல் சி. இளவரசன் கூறியது :

என்சிசி ராக்ஃபோா்ட் குரூப்பைச் சாா்ந்த 9 என்.சி.சி பட்டாலியன்கள், தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளி, கல்லூரி என்.சி.சி. மாணவா்களை ஒருங்கிணைத்து சா்வதேச யோகா தினத்தில் இணையவழி (வெப்பினாா்) வழியாக மாணவா்களின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தியதுடன், அவா்களுக்கு யோகா சாா்ந்த விநாடிவினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளையும் நடத்தி சிறந்த மாணவா்களைத் தோ்வு செய்துள்ளனா். மேலும் மாணவா்களின் இம்முயற்சியைப் பதிவு செய்யும் நோக்கில், இச்செயல்பாடுகளின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் மத்திய அரசின்

 இணைய தளத்தில் நாடெங்கிலும் உள்ள மக்கள் பயன்பெறும் விதத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com