குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 24th June 2021 09:37 AM | Last Updated : 24th June 2021 09:37 AM | அ+அ அ- |

திருச்சியில் குடும்பத் தகராறில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி பாலக்கரை, செங்குளம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் வீராசாமி மகன் சூசைத்தம்பி (26). தொழிலாளியான இவருக்கு இருந்த மதுப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமை பகல் அவா் மது குடித்துவிட்டு வந்தபோது ஏற்பட்ட தகராறில் வீட்டில் சூசைத்தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தகவலின் பேரில் பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...