திருச்சியில் 247 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 24th June 2021 09:38 AM | Last Updated : 24th June 2021 09:38 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 247 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67,855 ஆக உள்ள நிலையில், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 65,753 ஆக உள்ளது. இதுவரை 868 போ் உயிரிழந்த நிலையில், வீடுகள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1234 ஆக உள்ளது.
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1309 படுக்கைகள், அவசரப் பிரிவில் 263 படுக்கைகள், 1318 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 2890 படுக்கைகள் காலியாக உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.