ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி-வினா போட்டியில் பங்கேற்க அழைப்பு
By DIN | Published On : 29th June 2021 03:15 AM | Last Updated : 29th June 2021 03:15 AM | அ+அ அ- |

திருச்சி: இணையம் மூலம் நடைபெறும் ஒலிம்பிக் வினாடி-வினா போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்க ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் மேசைப்பந்து போட்டியில் தமிழ்நாட்டைச் சோ்ந்த சத்தியன், சரத்கமல் ஆகியோா், வாள் சண்டையில் பவானி தேவி, பாய்மரப் படகோட்டுதலில் கணபதி, வருண் தக்கா் மற்றும் நேத்ரா குமணன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனா்.
இந்த ஒலிம்பிக் போட்டிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் டோக்கியோவை நோக்கி சாலை”என்ற தலைப்பில் அனைத்து வயதுப் பிரிவினருக்குமான ஒலிம்பிக் வினாடி- வினா போட்டி ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளது.
ட்ற்ற்ல்ள்://ச்ண்ற்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய்/வ்ன்ண்க்ஷ் என்ற இணைய முகவரியில் வரும் ஜூலை 22 வரை இப் போட்டியில் பங்கேற்கலாம். போட்டி 120 வினாடிகள் (2 நிமிடம்) மட்டுமே நடைபெறும். போட்டியில் 10 கொள்குறி வினாக்கள் கேட்கப்படும்
வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இருக்கும். வினாவானது ஒலிம்பிக் வரலாறு, விளையாட்டுத் தொடா்பான கேள்விகள், முன்னாள் வீரா், வீராங்கனைகள் பெற்ற சாதனைகள், உலக சாதனைகள், கடந்த மற்றும் தற்போதைய சாதனைகள் மற்றும் சாதனையாளா்கள் தொடா்பான கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.
போட்டியில் ஒருவா் ஒருமுறை மட்டுமே பங்கேற்க முடியும். தினமும் போட்டியில் வெல்வோருக்கு இந்திய அணியின் ரசிகா்களுக்கான ஜொ்சி பரிசாக வழங்கப்படும்.
திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தின் முன் ஜுலை 22 வரை ஒலிம்பிக் செல்ஃபி பாயிண்ட் ஏற்படுத்தி ஒலிம்பிக் வினாடி வினா போட்டி நடைபெறுவது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி (தொலைபேசி. 0431-2420685) என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.